கண்ணு உங்க மேலத்தான் என்று கேப்ஷன் போட்டு சரண்யா துரோடி போட்டுள்ள லேட்ஸ்ட் போட்டோஸ்!
சீரியல் கைவசம் இல்லாவிட்டாலும் இணையதளத்தின் மூலமாக தன்னுடைய ரசிகர்களை எந்த பக்கமும் போய்விடக்கூடாது என்று இழுத்துப் பிடித்து வைத்திருக்கிறார் சரண்யா துரோடி
ரசிகர்கள் அதிகம்
அவருக்கு ரசிகர்கள் வட்டாரம் பெரியதாக இருந்தாலும் இவர் எப்போது மீண்டும் சீரியலில் வருவார் என்று ரசிகர்கள் காத்திருக்கின்றனர் .தனக்கான வாய்ப்பு சீக்கிரத்தில் வந்து விடும். மீண்டும் சீரியலில் தரிசனத்தை காட்டுவேன் என்று நம்பிக்கை தெரிவித்து இருக்கும் இவர் அதுவரைக்கும் இன்ஸ்டாகிராமை குத்தகைக்கு எடுத்து இருக்கிறேன் என தினமும் ரீல்ஸ் வீடியோக்களையும் போட்டோக்களையும் வெளியிட்டு வருகிறார்.
சீரியல்கள்
விஜய் டிவியில் ஒளிபரப்பான பல சீரியல்கள் முடிவடைந்தாலும் இதில் ஏதாவது சீரியலில் அறிமுகமாகி இருந்தாலே தொடர்ந்து விஜய் டிவியில் பல வாய்ப்புகள் கிடைத்துக் கொண்டிருக்கும். அந்த மாதிரி தான் விஜய் டிவியில் நெஞ்சம் மறப்பதில்லை சீரியலின் மூலமாக துறுதுறு கேரக்டரில் அறிமுகமான சரண்யா துரோடியை அந்த சீரியல் ரசிகர்கள் மட்டுமல்லாமல் இணையதள ரசிகர்களும் மறக்கவில்லை .
முதல் சீரியலிலேயே சூப்பர் வரவேற்பு
முதல் சீரியலில் தனக்கு கிடைத்த வரவேற்பை பார்த்து இவரே அசந்து போய் இருக்கிறார். இவர் சீரியல் நடிகை மட்டுமல்லாமல் செய்தி வாசிப்பாளர் மற்றும் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றிய அனுபவம் இருந்ததால் நெஞ்சம் மறப்பதில்லை சீரியலில் தன்னுடைய பட பட பேச்சினால் ரசிகர்களை கவர்ந்து இழுத்து விட்டார் .காதலிலும் காமெடியிலும் கலக்கிய இவரை பார்த்து இந்த சீரியல் மூலமாக இவருக்கு ரசிகர்கள் அதிகமாகி விட்டனர் .
அப்பவே அப்படி
இவர் கல்லூரியில் படிக்கும்போது கலைஞர் டிவியில் செய்தியாளராக வாய்ப்பு கிடைத்தது. அதில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் போது இரண்டு மாதங்களிலே ராஜ் டிவிக்கு மாறிவிட்டார் .பின்னர் ஜீ தமிழில் என காலேஜ் முடிப்பதற்கு முன்பே மூன்று சேனல்களிலும் வேலை செய்துவிட்டு தனது படிப்பை முடித்த இவர் சீனியர் நியூஸ் தொகுப்பாளராக சேர்ந்தார்.
லவ் ஸ்டோரி
நெஞ்சம் மறப்பதில்லை சீரியலில் இவருடைய சொந்த பெயரான சரன்யா என்னும் கேரக்டரில் இவர் நடித்திருந்தார். அதிலும் அந்த சீரியல் கதாநாயகன் அமித் பார்கவ் உடன் இருந்த கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க்கவுட்டாகி இந்த சீரியலுக்கு இளைஞர்கள் முதல் பலதரப்பட்ட ரசிகர்களையும் கொண்டுவந்தது .இவர்கள் இருவருக்கும் இடையில் இருக்கும் கெமிஸ்ட்ரியை பார்த்து கல்லூரி பெண்கள் பலரும் தங்களுடைய வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் களில் இவருடைய போட்டோக்களையும் லவ் ஸ்டோரி களையும் வைத்து வந்தனர் .
அன்புடன் வரவேற்ற சென்னை
சின்னத்திரையில் மட்டுமல்லாமல் வெள்ளித் திரையிலும் சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது எனும் திரைப்படத்தில் சிறு வேடத்தில் நடித்திருக்கிறார் . அதற்குப்பிறகுதான் இவருக்கு ஜீ தமிழில் ஒளிபரப்பான ஆயுத எழுத்து சீரியல் கலெக்டர் வேடம் கிடைத்திருக்கிறது .அந்த கேரக்டரிலும் தன்னால் முடிந்த அளவிற்கு நன்றாகவே பர்பாமன்ஸ் பண்ணிவிட்டார் .
அவர் விலகியதால் இவர்
இதற்கு முன்பு வேறு ஒரு நடிகையை இந்த கேரக்டரில் நடித்துக் கொண்டிருந்ததால் அவர் விலகியதும் அந்த கேரக்டரில் இவர் நடிக்கப் போகிறார் என்று தெரிந்ததும் முதலில் இவர் அந்த கேரக்டருக்கு செட்டாவாரா என்று புலம்பி வந்த ரசிகர்கள் பின்பு அவருடைய நடிப்பையும் கேரக்டரையும் புகழ்ந்து தள்ள ஆரம்பித்துவிட்டனர். ஆயுத எழுத்துக்கு பிறகு இவருக்கு எந்த சீரியல் வாய்ப்பும் இல்லாததால் வீட்டிலேயே ஒர்க்கவுட் செய்துகொண்டும் ரீல்ஸ் வீடியோக்களையும் எடுத்து குவித்து வருகிறார் .
ரீல்ஸ் வீடியோ
இதனால் இவருடைய ரசிகர்கள் மன நிம்மதி அடைந்திருக்கின்றனர் .எப்போது இவரை மீண்டும் சீரியலில் பார்க்கலாம் என இவருடைய ரசிகர்கள் ஆர்வமாக இருக்கின்றனர். இவரும் அவர்களை ஏமாற்றாமல் அடிக்கடி தன்னுடைய நடிப்பை வெளிக் காட்டி வருகிறார் . அதுவும் தற்போது போட்டோ எடுக்கிறேன் என மொட்டை மாடியில் வெள்ளை சட்டையில் கையை தூக்கி நான் உங்களைத் தான் பார்க்கிறேன் என கேப்ஷன் போட்டு போட்டோ போட்டிருக்கிறார்.
கண்ணைப் பாருங்களேன்
இவர் போட்டிருக்கும் போட்டோவை பார்த்து சிலர் குறி தவறாமல் நாங்களும் உங்களைத்தான் பார்க்கிறோம் என்று கூறியிருக்கின்றனர் . இப்படி கையை தூக்கி நின்று கொண்டிருந்தால் நாங்களும் உங்களை தான் பார்க்கிறோம் என்று உருகி இருக்கின்றனர் .அதுவும் சில நெட்டிசன்கள் இந்தச் சட்டைக்கு பதிலாக ஸ்லீவ்லெஸ் டிரஸ்ஸில் வந்திருந்தால் இன்னும் நன்றாக நாங்கள் பார்த்து இருப்போம் என ஜொள்ளு வடித்து வருகின்றனர்.
No comments:
Note: only a member of this blog may post a comment.