தண்ணீர் குடுவை மூடிகளின் நிறம் ஏன் வெவ்வேறு நிறத்தில் உள்ளது? ஒவ்வொரு நிறத்துக்கும் என்ன அர்த்தம் தெரியுமா?..

                             Water Bottle Cap Colour Meaning Captions.[Image:theinvisiblenarad] 


வெளியே செல்லும் போது தண்ணீர் பாட்டிலை மறந்து விட்டால், உடனே கடைகளில் விற்கப்படும் மினரல் வாட்டரை வாங்கிக் குடிப்போம். ஆனால் அப்படி வாங்கும் மினரல் வாட்டர் பாட்டிலை என்றாவது நீங்கள் கூர்ந்து கவனித்திருக்கிறீர்களா? அதுவும் அதன் மூடியின் நிறத்தை கவனித்ததுண்டா?

அப்படி கவனித்திருந்தால், நீங்கள் வாங்கும் ஒவ்வொரு வாட்டர் பாட்டிலின் மூடியும் ஒவ்வொரு நிறத்தில் இருப்பதைக் காணலாம். நிறைய பேர் இந்த பாட்டில் மூடியின் நிறம் வேறுபட்டிருப்பதைப் பற்றி கவலைப்படாமல் இருக்கலாம். ஆனால் அந்த வாட்டர் பாட்டில் மூடியின் நிறம் வேறுபட்டிருப்பதற்கு பின் காரணம் ஒன்று உள்ளது.


#WhatIsThe MeaningOf DifferentColoursOfCapsOf WaterBottles

இந்த படத்துல உங்களுக்கு முதல்ல என்ன தெரியுதுன்னு சொல்லுங்க.. நீங்க நல்ல நண்பரா, இல்லையான்னு சொல்றோம்.."இந்த படத்துல உங்களுக்கு முதல்ல என்ன தெரியுதுன்னு சொல்லுங்க.. நீங்க நல்ல நண்பரா, இல்லையான்னு சொல்றோம்.."

இந்தியாவில் 1970-களில் தான் முதன்முதலாக வாட்டர் பாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது நகரங்களில் பெரும்பாலான வீடுகளில் அந்த பாட்டில் தண்ணீரைத் தான் நம்பியிருக்கிறார்கள். நீங்களும் அடிக்கடி பாட்டில் நீரை வாங்கிக் குடிப்பவராயின், இனிமேல் நீங்கள் வாங்கும் நீர் பாட்டிலின் நிறத்தைக் கவனியுங்கள்.


ஏனெனில் நீர் பாட்டிலின் மூடியின் நிறங்கள் ஒவ்வொன்றும் அந்த பாட்டிலில் உள்ள நீரைப் பற்றிய விவரத்தை தான் நமக்கு சொல்ல வருகிறது. இதுவரை உங்களுக்கு தெரியாதெனில், இனிமேல் தெரிந்து கொள்ளுங்கள்.


நீர் பாட்டிலில் மொத்தம் 5 வகையான நிறங்களில் மூடி உள்ளன. இப்போது நீர் பாட்டில் மூடியின் நிறங்கள் மற்றும் அதன் அர்த்தங்கள் என்னவென்பதைக் காண்போம்.

நீலநிற மூடி

மினரல் வாட்டர் பாட்டிலின் மூடியின் நிறமானது நீல நிறத்தில் இருந்தால், அந்த தண்ணீர் ஒரு ஊற்றில் இருந்து நிரப்பப்பட்ட தண்ணீர் என்று அர்த்தம். இந்த வகையான நீர் மினரல் வாட்டர் என்று அர்த்தம். இப்படிப்பட்ட நீர் பாட்டில் தான் பெரும்பாலான சிறிய கடைகளில் அதிகம் விற்கப்படுகிறது.


பச்சை நிற மூடி

சில வாட்டர் பாட்டிலின் மூடியின் நிறத்தை பச்சை நிறத்தில் நீங்கள் பார்த்திருக்கலாம். இப்படி பச்சை நிற மூடியைக் கொண்ட வாட்டர் பாட்டிலானது, அந்த நீரில் சுவைகள் சேர்க்கப்பட்டிருப்பதைக் குறிக்கிறது. இதனால் தான் பச்சை நிற மூடி கொண்ட பாட்டில் நீரை குடித்தால், அந்த நீரில் ஒருவித வித்தியாசமான சுவையை அனுபவிக்க நேரிடுகிறது.


வெள்ளை நிற மூடி

சில சமயங்களில் வாட்டர் பாட்டிலின் மூடியின் நிறத்தை வெள்ளை நிறத்தில் நீங்கள் கண்டிருக்கலாம். இப்படி வெள்ளை நிற மூடியைக் கொண்ட வாட்டர் பாட்டிலில் இருக்கும் நீர், இயந்திரம் மூலம் சுத்திகரிக்கப்பட்டது என்பதைக் குறிக்கிறது.


இந்த படத்துல உங்களுக்கு முதல்ல என்ன தெரியுது சொல்லுங்க.. நீங்க மன அழுத்தத்தை எப்படி கையாள்வீங்க-ன்னு சொல்றோம்."இந்த படத்துல உங்களுக்கு முதல்ல என்ன தெரியுது சொல்லுங்க.. நீங்க மன அழுத்தத்தை எப்படி கையாள்வீங்க-ன்னு சொல்றோம்."

கருப்பு நிற மூடி

சில நேரங்களில் கருப்பு நிற மூடியைக் கொண்ட வாட்டர் பாட்டிலை பெரிய பெரிய கடைகளில் நீங்கள் பார்த்திருக்கலாம். இப்படியான கருப்பு நிற மூடியைக் கொண்ட நீர் பாட்டிலில் உள்ள தண்ணீர் காரத்தன்மையைக் கொண்டுள்ளது என்று அர்த்தம். இந்த வகையான பாட்டில் நீரின் விலை சற்று அதிகமாக இருக்கும். மேலும் இந்த பாட்டில் நீர் சாதாரண பாட்டில் நீரை விட ஆரோக்கியமானது.

மஞ்சள் நிற மூடி

சில வாட்டர் பாட்டிலின் மூடியின் நிறம் மஞ்சள் நிறத்தில் இருப்பதை பார்த்திருக்கலாம். அப்படியானால் அந்த பாட்டிலில் உள்ள நீரில் வைட்டமின்கள் மற்றும் எலக்ட்ரோலைட்டுகள் போன்றவை கலந்துள்ளன என்று அர்த்தம்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. சூரியன் டிவி இணையதளம் இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)


Source By: Tamil.Boldsky

Post a Comment

Previous Post Next Post