மருத்துவரானர் 3 அடி உயரமுடைய மனிதர்.. ஊக்குவிக்கும் கதை!!!
3 அடி உயரம் கொண்ட 22 வயதுடைய கணேஷ் பாரையா உலகிலேயே முதல் குள்ளமான மருத்துவர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.
கணேஷ் பாரையாவுக்கு 7 சகோதரிகள் மற்றும் 1 சகோதரர் உள்ளனர். அவரின் அப்பா ஒரு விவசாயி என்பதால் கணேஷ்தான் அடுத்து குடும்பத்தைப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற சூழ்நிலை வந்தது. ஆனால் 3 அடி உயரம் மட்டுமே இருக்கும் கணேஷிற்கு டாக்டராக வேண்டும் என்ற பெரிய கனவு இருந்தது.
18 கிலோ மட்டுமே உள்ள கணேஷ் பாவ்நகர் மருத்துவக் கல்லூரியில் MBBS படிப்பை முடித்துவிட்டுத் தற்போது இன்டெர்ன்ஷிப் செய்து வருகிறார். பிறக்கும்போதே குள்ளத்தன்மையுடன் பிறந்த இவரின் உடலில் 72 சதவீத அளவு லோகோமோட்டிவ் குறைப்பாடுடன் இருப்பது பிறந்தப்பின் கண்டறியப்பட்டது. மனதளவில் பெரிய ஆளான இவரின் குரல் வளம், மென்மையாகக் குழந்தைத்தன்மைக் கொண்டதாக இருக்கும். அந்தக் குரலிலும் தனக்கானத் தன்னம்பிக்கை உணர்வைத் தேடிக் கண்டுபிடித்துத் தன்னை வளர்த்துக்கொண்டார்.
இவர் மருத்துவரானது ஒன்றும் அவ்வளவு சுலபமே அல்ல. இவருக்கு 7 சகோதரிகள் மற்றும் 1 சகோதரர் உள்ளனர். அவர்களில் சிலர் 10வது படிக்கும்போதே திருமணம் செய்துவைக்கப்பட்டனர். தன் குடும்பத்தில் முதன்முறை கணேஷ் மட்டுமே கல்லூரி சென்றார். கடந்த 2018ம் ஆண்டு கணேஷ் மற்றும் மேலும் இரு குறைபாடுள்ள நபர்களுக்கு மருத்தவப் படிப்பிற்கான சேர்க்கை மறுக்கப்பட்டது.
Source in Tamil KalikiOnline
அதுவும் கணேஷ் 12வதில் 87 சதவீத மதிப்பெண் மற்றும் NEET தேர்வில் 233 மதிப்பெண் எடுத்தும்கூட அவருக்கு மருத்துவப் படிப்பிற்கானச் சேர்க்கை மறுக்கப்பட்டது. அவர் குறையுடன் பிறந்தது மட்டுமே அதற்குக் காரணம் என்றால் அதை யாரால்தான் ஏற்றுக்கொள்ள முடியும். அப்போது அவருடன் இருந்த ஒரே துணை அவர் பள்ளியின் முதல்வர் மட்டுமே. 'குறையுடன் பிறப்பவர்கள் மருத்துவராகக் கூடாதா?' என்ற கேள்வியை எழுப்பிப் போராட்டத்தை ஆரம்பித்தார்கள். அந்தப் போராட்டம் உச்சநீதிமன்றம் வரைச் சென்றது.
ஒருவழியாக அவர்களின் போராட்டம் சில காலத்திற்குப் பிறகு முடிவடைந்தது. ஆம்! உச்சநீதிமன்றம் Disability Act 2016 மூலம் கணேஷிற்கு மருத்துவம் படிப்பதற்கான அனுமதியை வழங்கியது. கணேஷுடைய கனவு நினைவாவதற்கான முதல் படியை வெற்றிகரமாகக் கடந்துவிட்டார்.தற்போது கணேஷ் ஒரு தோல் மருத்துவராக நிமிர்ந்து (Dermatology ) வலம் வருகிறார்.
அவர் போராட்டத்தையே தன் வாழ்க்கையாக வைத்துள்ளார். அவர் ஒருவருக்கு சிகிச்சை அளிக்கும்போதும்கூட நாற்காலி மேல் ஏறித்தான் சிகிச்சை பார்ப்பார். இப்படிப் பல கஷ்டங்கள் இருந்தாலும் கூட, அவரைப் பொறுத்தவரை ‘போராட்டம் வாழ்க்கையானால், வலி என்பது சுகமே’. அனைவருக்கும் எளிதாகக் கிடைக்கும் ஒன்றே சிலருக்கு போராட்டத்தின் மூலம் தான் கிடைக்கிறது.
கணேஷ், கிராமத்தில் இருக்கும் ஏழை மக்களைத் தேடிச் சென்று மருத்துவம் பார்க்கிறார். தனக்குக் கிடைக்காததை மற்றவர்களுக்குக் கொடுக்க நினைப்பதுதான் தெய்வ மனமாம்.
No comments:
Note: only a member of this blog may post a comment.