தனது திருமணம் குறித்து வெளியான செய்திகளுக்கு மறுப்பு: நடிகை சார்மி!

தனது திருமணம் குறித்து வெளியான செய்திகளை பிரபல நடிகை சார்மி பதில் அளித்துள்ளார். 

தமிழில் காதல் அழிவதில்லை. காதல் கிசு கிசு, லாடம் உள்பட சில படங்களில் நடித்தவர் சார்மி. தெலுங்கில் பல படங்களில் நடித்துள்ள அவர், அங்கு இயக்குனர் புரி ஜெகநாத்துடன் இணைந்து படங்கள் தயாரித்து வருகிறார். 

இப்போது விஜய் தேவரகொண்டா நடிக்கும் படத்தை புரி ஜெகநாத்துடன் இணைந்து தயாரிக்கிறார்.

கடந்த சில நாட்களாக, சார்மி திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தெலுங்கு திரையுலகில் பரப்பாக செய்திகள் வெளியாகின.

இந்நிலையில், அதை மறுத்துள்ள நடிகை சார்மி, தனது வேலையில் சிறப்பான காலகட்டத்தில் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற தவறான முடிவை தனது வாழ்க்கையில் ஒருபோதும் எடுக்க மாட்டேன் என்றும் தெரிவித்துள்ளார்.


மேலும், பொய்யாக எழுதுபவர்களுக்கும் வதந்திகளுக்கும் குட்பை, சுவாரசியமான கதைகளை உருவாக்குவதில் நீங்கள் சிறந்தவர்களாக இருக்கிறீர்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.0 Comments