பிரபல தனியார் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஒளிபரப்பான நிகழ்ச்சி குக் வித் கோமாளி 2, தமிழகத்தில் இந்த நிகழ்ச்சிக்கு மட்டும் ரசிகர்கள் அதிகம். நிகழ்ச்சி ஆரம்பித்தது முதல் இறுதி வரை சின்னத்திரை ரசிகர்கள் பெரிய ஆதரவு கொடுத்து வந்தனர்.
தற்போது ரசிகர்கள் எல்லோரின் மனதில் எழும் ஒரே கேள்வி 3வது சீசன் எப்போது தொடங்கும் என்பது தான். ஆனால் இப்போதைக்கு இல்லை என்பது தெரிகிறது.
குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சியின் செட் மொத்தத்தையும் பிரித்து இடம் காலியாக இருந்த புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.
இந்தநிலையில் நிகழ்ச்சியின் நடுவர்களில் ஒருவரான வெங்கடேஷ் பட் விருது விழாவில் கலந்து கொண்டு பேசிய போது என்னுடைய பேவரெட் புகழ் தான் என தெரிவித்துள்ளார். அடுத்து பாபா பாஸ்கர், அஷ்வின், கனி போன்றவர்களும் பிடித்தவர்கள் என கூறியுள்ளார்.