தமிழ் சினிமா நடிகைகள் வாங்கும் சம்பளம் குறித்த லேட்டஸ்ட் தகவல் தீயாய் பரவி வருகிறது. சினிமாவை பொருத்தவரை ஒரு படம் ஓட வேண்டும் என்றால் ஹீரோவுக்கு நிகராக ஹீரோயினும் ரொம்பவே முக்கியம்.
ஹீரோயின்கள் இல்லாத படங்கள் ஹிட்டடித்தாலும், கண்களுக்கு விருந்தை எதிர்பார்த்து சினிமாவுக்கு வரும் ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றம்தான் இருக்கும்.
நடிகைகளுக்கு குறைவுதான்
என்னதான் ஹீரோக்களுக்கு இணையாக வெயில், மழை, பனி, காடு, மேடு என சுற்றி திரிந்தாலும் ஹீரோயின்களுக்கு சம்பளம் ஹீரோக்களை காட்டிலும் குறைவுதான். அதிலும் கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகைகளின் எண்ணிக்கை சொற்பமே.
நயன்தாரா டாப்
அந்த வகையில் தற்போது தமிழ் சினிமாவின் டாப் நடிகைகள் பெறும் சம்பளம் குறித்த புதிய தகவல் வைரலாகி வருகிறது. அதன்படி தென்னிந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக நயன்தாரா உள்ளார்.
நயன்தாரா சம்பளம்
லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் அழைக்கப்படும் நயன்தாரா, ஒரு படத்திற்கு 4 கோடி ரூபாய் முதல் 5 கோடி ரூபாய் வரை வாங்குகிறார் என கூறப்படுகிறது. நயன்தாராவுக்கு தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மலையாளம் உட்பட பல மொழிகளிலும் பெரும் ரசிகர் பட்டாளம் உள்ளது குறிப்பிடத்தக்கது.
சமந்தா சம்பளம்
அவருக்கு அடுத்தப்படியாக நடிகை சமந்தா ஒரு படத்திற்கு மூன்றரை கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறார். நடிகை சமந்தாவும் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.
தெலுங்கிலும் டாப்
தமிழில் விஜய், சூர்யா, தனுஷ் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு வரும் சமந்தா தெலுங்கிலும் மகேஷ் பாபு உட்பட டாப் நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார். கைவசமும் பல படங்களை வைத்துள்ளார் சமந்தா.
அனுஷ்கா சம்பளம்
அடுத்து நடிகை அனுஷ்கா, இவர் ஒரு படத்திற்கு 3 கோடி ரூபாய் சம்பளம் வாங்குவதாக தெரிகிறது. வரலாற்று படங்கள் என்றால் இயக்குநர்களின் முதல் ஆப்ஷனாக வரும் அனுஷ்காவுக்கு பாகுபலி படத்திற்கு பிறகு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கீர்த்தி சுரேஷ் சம்பளம்
இதேபோல் நடிகை கீர்த்தி சுரேஷும் ஒரு படத்திகு 3 கோடி ரூபாய் சம்பளம் கேட்பதாக கூறப்படுகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகர்களுடன் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ், மகாநடி படத்திற்காக தேசிய விருது பெற்ற பிறகு சம்பளத்தை பல மடங்கு உயர்த்திவிட்டதாக கூறப்படுகிறது.
காஜல் அகர்வால் சம்பளம்
நடிகை காஜல் அகர்வால் ஒரு படத்திற்கு 2 கோடி ரூபாய் சம்பளம் வாங்குவதாக தெரிகிறது. அஜித், விஜய், கார்த்தி என முன்னணி நடிகர்களுடன் நடித்து வரும் காஜல் தற்போது இந்தியன் 2, பாரீஸ் பாரீஸ், தெலுங்கில் ஆச்சார்யா உள்பட 7 படங்கள் கைவசம் வைத்துள்ளார்.
த்ரிஷா சம்பளம்
20 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் ஹீரோயினாக உள்ள நடிகை த்ரிஷா 2 கோடி ரூபாய் சம்பளம் வாங்குவதாக தெரிகிறது. ரஜினி, கமல், அஜித், விஜய், சூர்யா, தனுஷ், ஜெயம் ரவி, சிம்பு, விஜய் சேதுபதி என முன்னணி நடிகர்கள் பலருடனும் ஜோடியாக நடித்து வருகிறார் த்ரிஷா.
ஸ்ருதிஹாசன், தமன்னா
நடிகைகள் ஸ்ருதிஹாசன், தமன்னா ஆகியோர் ஒன்றரை கோடி ரூபாய் சம்பளம் கேட்பதாக கூறப்படுகிறது. ஸ்ருதிஹாசன் தற்போது கேஜிஎஃப் இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் சலார் படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.