காதல் கோட்டை கட்டிய காதல் மன்னன் அஜித் குமாரின் 50வது பிறந்த நாள் இன்று. வாலியாய் அமர்க்களப்படுத்தி, பூவெல்லாம் தனது வாசத்தை ஏற்படுத்திய அட்டகாச வில்லன் அல்டிமேட் ஸ்டார்.
காதல் கோட்டை கட்டிய காதல் மன்னன் அஜித் குமாரின் 50வது பிறந்த நாள் இன்று. வாலியாய் அமர்க்களப்படுத்தி, பூவெல்லாம் தனது வாசத்தை ஏற்படுத்திய அட்டகாச வில்லன் அல்டிமேட் ஸ்டார்.வரலாறு திரைப்படத்தில் கீரிடம் சூட்டிய சூப்பர் பில்லா, மங்காத்தாவில் அசல் காட்டிய, பில்லா 2, 1971 மே மாதம் பிறந்தவர்.
உழைப்புக்கு அஞ்சாத இந்த அல்டிமேட் ஸ்டார் தொழிலாளர் தினத்தன்று பிறந்தது பொருத்தமானது தான்.
அப்பா தமிழர் என்றாலும், தமிழ்த் திரைப்படங்களில் நடிப்பதன் மூலமே தமிழ் பேசக் கற்றுக்கொண்ட டயலாக் டெலிவரி மன்னன் அஜித்.
மனைவி நடிகை ஷாலினி, அனோசுகா ஆத்விக் என இரு குழந்தைகளுடன், கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட பெரிய குடும்பத்துக்காரர் நடிகர் அஜித்.
மனைவி நடிகை ஷாலினி, அனோசுகா ஆத்விக் என இரு குழந்தைகளுடன், கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட பெரிய குடும்பத்துக்காரர் நடிகர் அஜித்.
திரைத்துறையில் தானாகவே, தனது தனித் திறமைகளின் மூலம் அல்டிமேட் ஸ்டாராக அவதாரம் எடுத்திருக்கும் அஜித், தொடர்க்கத்தில் விளம்பரப் படங்களிலும் நடித்து பெயர் பெற்றார். 1992 இல் பிரேம புத்தகம் என்ற தெலுங்குத் திரைப்படத்தில் அறிமுகமாகி, சிறந்த புதுமுகத்திற்கான விருது பெற்றார்.
பிறகு அமராவதி தமிழ்த் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைத்த அஜித், பல்துறை வித்தகர். விளையாட்டு வீரர் மட்டுமல்ல, கார் பந்தய பிரியர்.
1995 ஆவது ஆண்டில் வெளியான ஆசை திரைப்படம் மூலம் தமிழ் ரசிகர்களின் நெஞ்சில் இடம் பிடித்த அஜித்குமார் இன்று தமிழ்நாட்டின் தல....
தல அஜித்தின் ஐம்பதாவது திரைப்படம் மங்காத்தா என்றால், ஐம்பதாவது வயதில் 60வது திரைப்படமான வலிமையில் வீறு கொண்டு எழுகிறார் அல்டிமேட் அஜித்…
பிறந்தநாள் வாழ்த்துக்கள் தல அஜித் என்று அவரின் சினிமா ரசிகர்கள்....
Tags
Cine_Mini