‘தளபதி 65’ இரண்டாம் கட்ட படப்பிடிப்புநிறுத்தம்..!

 


விஜய்யின் அசத்தலான நடிப்பால் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் ‘தளபதி 65’. இப்படத்தை இயக்குநர் நெல்சன் இயக்குகிறார். படத்தின் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். 

மேலும் இப்படத்தில் அபர்ணா தாஸ், யோகிபாபு, விடிவி கணேஷ் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் கடந்த மாதம் நடந்து முடிந்தது.

இரண்டாம் கட்ட படப்பிடிப்பை சென்னையில் நடத்த படக்குழு திட்டமிட்டிருந்தது. இதற்காக சென்னையில் பிரம்மாண்ட செட் போடப்பட்டு, விஜய், பூஜா ஹெக்டே நடிக்கும் காட்சிகளை இந்த வாரம் படமாக்க இருந்தனர்.

ஆனால் தற்போது தமிழகத்தில் கொரோனா பரவல் காரணம்மாக படப்பிடிப்பை தள்ளிவைத்துள்ளதாக கூறப்படுகிறது. கொரோனா தாக்கம் குறைந்த பின்னர் படப்பிடிப்பை நடத்த படக்குழு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

Post a Comment

Previous Post Next Post